தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களிடம் தரப்படும் பராமரிப்பு வரி ரசீது, பெரும் அச்சுப் பிழையுடன் காணப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு, தனியார் சுங்கச் சாவடிகள், பராமரிப்பு வரி வசூலிக்கும் நடைமுறை உள்ளது.
ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில், இதற்கான ரசீது அச்சடிக்கப் பட்டு இருக்கும்.ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில், எந்த பிழையும் இன்றி அச்சடிக்கப் பட்டு உள்ள அந்த ரசீதில், தமிழில் உள்ள வார்த்தைகள் மட்டும், பொருள் புரியாத வகையில், பிழையுடன் அச்சடிக்கப் பட்டு உள்ளது.சென்னை தாம்பரம் அருகில் உள்ள சுங்கச் சாவடியில் வழங்கப்படும் ரசீது, பெரும் பிழையுடன் காணப்படுவதால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அது என்ன "ஸ்தலம்?'
"இடம்' என்ற நடைமுறை சொல் பழக்கத்தில் இருக்கும் போது, அதற்கு பதிலாக அந்த ரசீதில், "ஸ்தலம்' என்ற வார்த்தையை அச்சடிக்க முயற்சி செய்துள்ளனர். அதுவும், "ஸ்தளம' என, பிழையுடன் அச்சடிக்கப் பட்டு உள்ளது.கிலோ மீட்டரை சுருக்கமாக, கி.மீ., எனப் பயன்படுத்துவது வழக்கம். அதையும், "கி மி' என, பிழையுடன் அச்சடித்துள்ளனர். வாகனம் எந்த இடத்திலிருந்து, எந்த இடம் செல்கிறது என அறியும் இடத்தில், "அதுர டொல ப்லாஜா' என்ற புரியாத மொழி வார்த்தைகள் உள்ளன."பிரிவு' என்ற இடத்தில், "தாம்பரம் முதல் திண்டிவனம்' என, எழுதப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், எந்த பொருளும் இல்லாத வண்ணம், "தம்பரம, திடிவநம' என, அச்சடிக்கப்பட்டு உள்ளது. "வாகனத்தின் வகை' என்ற இடத்தில், "காரு, வ்யாந்த், ஜூப்' என உள்ளது.இப்படி, தப்பும் தவறுமாக உள்ள ரசீதில், பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீது என்ற வார்த்தையும்; கட்டணம் பற்றிய இதர தகவல்களும், பிழை இல்லாமல் அச்சடிக்கப் பட்டு உள்ளன.முன்பு, தேசிய சேமிப்பு குறித்த மத்திய அரசு விளம்பரங்கள், நாக்பூரில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். அங்கு பணிபுரியும் யாராவது ஒரு தமிழர், தனக்குத் தெரிந்த தமிழில், அந்த மொழிபெயர்ப்பைச் செய்வது உண்டு.
அக்கறையின்மை
ஆனால், இப்போது கணினி காலம். தமிழ் மொழியில் கட்டண ரசீதைத் தெளிவாக அச்சடிக்க முடியாதா அல்லது அக்கறையின்மையா? கட்டணம் வசூலிப்பதில் இருக்கும் அக்கறையை, நெடுஞ்சாலைத் துறை இதில் ஏன் காட்டவில்லை. கட்டணம் செலுத்துவோர், விதிக்கப்பட்ட தொகையை மட்டும் கவனிப்பர்; மற்றவற்றை பொருட்படுத்தமாட்டார்கள் என நினைக்கின்றனரா?சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட, பெரும் குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் கண்களில் இது படவில்லையா அல்லது தங்கள் கார் டிரைவர்களே பணத்தைக் கட்டி ரசீது வாங்குவதால், இந்த விஷயம் அவர்கள் கண்களில் படவில்லையா?
வாகன ஓட்டிகள் புகார்
இங்கு மட்டும் அல்ல, பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் வழங்கப்படும் ரசீது, பிழையுடனே காணப்படுவதாக, வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். இவ்வாறு எழுத்துப் பிழையுடன் ரசீது வழங்கும் சுங்கச் சாவடிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், மற்ற சுங்கச் சாவடிகள், பிழையின்றி ரசீது வழங்கும்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த மதி கெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால் ............................ தமிழை வளர்க்க என்று சொல்லி தமிழ் வளர்ச்சி துறை என்று ஒரு துறை அதற்கு ஒரு மந்திரி வேறு, அந்த துறையின் வெப் சைட் போய் பாருங்கள் இரண்டே இரண்டு வார்த்தை மட்டும் தான் தமிழ் மற்றவை அனைத்தும் ஆங்கிலம் தான் அதன் பாலிசி நோட் அனைத்தும் ஆங்கிலத்தில் தான். எதை செய்கிறார்களோ இல்லையோ முருகன் துணை, பிள்ளையார் துணை என்பது போல அம்மா என்றால் அம்மா துணை அல்லது ஐயா துணை, அதை மட்டும் வரிக்கு வரி மாற்றம் செய்கிறார்கள் தவிர வேறு உருப்பிடியாக எதுவும் இல்லை. எதற்க்காக அந்த துறை என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அதற்கு ஒரு மந்திரி, துறையின் தலைவர் அதுவும் தமிழ் நாட்டில், வெட்க கேடு... நெடுஞ்சாலை துறையின் ரசீதில் தப்பு தப்பாகவாவது தமிழில் அச்சடிக்க பட்டுள்ளதே என்று சந்தோசப்படுங்கள். தமிழை எப்பிடி வளர்க்க முடியும் என்று தெரிய வில்லையென்றால் அந்த துறையை இழுத்து மூடினால் நல்லது. நரிகளும், மொள்ளமாரி கயவர்களும் சேர்ந்து தமிழை வளர்கிற அழகே அழகு.
பொதுவாகவே நிறைய தமிழர்கள் தமிழை தவறாக உச்சரிக்கின்றனர்..மேலும் தமிழ் என்பது ஒரு கேவலமான மொழி. ஆங்கிலமும் இந்தியும்தான் சிறந்தது என்ற நினைப்பும் இருக்கிறது. பிறகு மற்றவர்கள் எப்படி தமிழை மதிப்பார்கள்...???முதலில் தமிழன் தமிழையும்,சக தமிழனையும் மதிக்க வேண்டும். தமிழின் சிறப்புகளை அறிந்துகொள்ள வேண்டும் . பிறகு எல்லாம் சரியாகும்........
ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழுக்கு செய்யாத தொண்டையா இந்த தமிழ் தமிழ் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் கும்பல் செய்தது? தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறிய ஈ. வெ. ராமஸ்வாமி நாயக்கரின் (அவருக்கு இது மாதிரி பெயர் போட்டு கடிதம் எழுதினால்தான் விடை கிடைக்கும் என்று திருச்சியில் ஒரு சொல்வழக்கு உண்டு.) பெயரில் சாதி, கடவுளின் பெயர் வைத்துக் கொண்டு நாத்திகம் பேசி பணம் பண்ணிய பேர்வழியின் கொள்கையை பின்பற்றும் கூட்டம், தமிழுக்கு உழைக்கின்றனர் என்று கூறி தமிழின மக்களை ஏமாற்றாதீர்கள். இவர்கள் எல்லாம் நாட்டு மக்களை சுரண்டுவதற்காக தமிழின் பெருமையை அடகு வைத்த கொள்ளையர்கள். கருணாநிதி, தயாநிதி, கலாநிதி, ஸ்டாலின் இவையெல்லாம் எந்த தமிழ் இலக்கியத்தில் இருந்து எடுத்த பெயர்கள் என்று எந்த அறிவாளியாவது கூறுவார்களா?
கொஞ்ச நாளைக்கு கொலைவெறி பாட்டுக்கு வெறிபுடுச்சு ஆடுன தமிழ் காவலர்கள் எங்கே போனார்கள் ?கடைகளில் ஆங்கிலமும் தமிழும் கலந்து இருப்பதை பார்க்கும் பொது இவர்கள் எங்கே போனார்கள் ??இவர்கள் சினிமா துறையை
எதிர்பதாக நடித்தால் தானே இவர்கள் popularity அடைவார்கள் அன்புள்ள தினமலர் அவர்களே இவர்கள் தங்களை தமிழ் காவலர்களாக கூறுபவர்கள் இப்போது வாய் திறக்க மாட்டார்கள் அவர்கள் தமிழ் காவலர்கள் இல்லை தமிழ் துரோகிகள்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.