சென்னை: பொறியியல் படிப்பில், மெக்கானிக்கல், சிவில் ஆகிய இரு பாடப் பிரிவுகளை, தமிழ் வழியில் படிக்க வாய்ப்பு இருந்தபோதும், தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற எண்ணம் உள்ளதால், இதில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
சேர்க்கை குறைவு: முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொறியியல் படிப்பை, தாய்மொழியான தமிழில் வழங்க வேண்டும் என்று முயற்சி எடுத்து, முதற்கட்டமாக மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை, தமிழ் வழியில் அறிமுகப்படுத்தினர். இந்தப் பிரிவில் சேர்ந்த மாணவர்கள், தற்போது நான்காம் ஆண்டு படிக்கின்றனர். இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து, இதர பாடப் பிரிவுகளையும் தமிழ் வழியில் அறிமுகப்படுத்த, முந்தைய ஆட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், 40, 50 மாணவர் மட்டுமே, இந்த பிரிவில் சேர்ந்து வருகின்றனர்.
கவலை: இந்த ஆண்டு, சிவில் பிரிவில் இதுவரை, 18 மாணவர்களும்; மெக்கானிக்கல் பிரிவில், 22 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். மேலும், அண்ணா பல்கலை கல்லூரியில், மெக்கானிக்கல் பிரிவில் நான்கு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மொத்தத்தில், 24ம் தேதி நிலவரப்படி, 44 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஆங்கில வழி பாடப் பிரிவுகளில், ஆயிரக்கணக்கில் மாணவர் சேரும்போது, தமிழ் வழியில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர் சேர்ந்து வருவது, அரசை மட்டுமல்லாமல், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மொழி தடை கிடையாது: கல்வியாளர் பாலகுருசாமி இதுகுறித்து கூறியதாவது: தமிழ் மொழியை, வெறும் கவிதை, கட்டுரை, பாட்டு என்ற அளவில் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் வளர்க்க வேண்டும். அப்படி செய்தால் தான், மொழி வளரும். இந்த நோக்கில் தான், பொறியியலில் சோதனை அடிப்படையில், தமிழ் வழி பிரிவை அரசு கொண்டு வந்தது. பொறியியல் பயில, மொழி ஒரு தடையே கிடையாது. தமிழில் படித்தாலும், ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பாலகுருசாமி கூறினார்.
"ஆய்வு செய்யப்படும்!' தமிழ் வழி சேர்க்கைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: தாய்மொழியில் பொறியியலை படிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், ஆங்கிலத்தில் படித்தால், மாணவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். சைக்கிளுக்கு, "மிதிவண்டி' என, எழுதப் படுகிறது. அதுவே, சைக்கிள் உதிரி பாகங்களின் பெயர்களை தமிழில் எழுதினால், யாருக்குமே புரிவது சிரமம் தான். இதுபோன்ற நடைமுறைச் சிக்கலும், மாணவர் சேர்க்கைக்கு தயக்கமாக இருக்கலாம். எனினும், அண்ணா பல்கலைக்கு துணைவேந்தர் நியமிக்கப்பட்ட பின், தமிழ் வழி சேர்க்கையை வலுப்படுத்த, என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
future ல தமிழ் வரணும் அப்டின்னு நினைத்தால் இப்பவே ஆரம்பிக்கணும் .இப்பதான் ஒரு செங்கல் எடுத்து வச்சு இருகாங்க .அதுக்குள்ள ஏன் இவளோ எதிர்ப்பு? தாய் மொழியில் படிக்கும்போதுதான் அறிவு வளரும்,நமது மொழியும் வளரும்,இல்லை என்றால் அடையாளம் அற்று போவோம். தமிழ் தெரிந்தால் தான் அரசு வேலை என்று ஆணை வரட்டும், படிக்கச் ஆரபித்து விடுவார்கள், ஒரு சிறிய ஆரம்பம். money காக அனைத்தையும் இழக்காதீர்கள் .
நாம வீடு கட்ட போடுற பிளானில் இருந்து,கட்டட வரை படம்,பிளாட் பிளான் எல்லாம் புளூ பிரிண்டில இங்கிலீஷில தான் இருக்குது.புளூ பிரின்டுன்னு தான் சொல்றோம்.பைல் பாவுண்டேஷனா,மேசன்றியான்னு தன்கேக்குறோம். பில்டிங் எஸ்டிமேட் னுதான் சொல்றோம்.பிளிந் பீமனு தான் சொல்றோம்.லிண்டல் வரை வந்தாச்சான்னு கேக்குறோம்.ஜன்னலுக்கு கிரில் தான் போடுறோம்.கான்க்ரீட் னுதான் சொல்றோம்.ப்ளம்பர் ,ஏலேக்ரீஷியன் அப்புடித்தான் கூப்புடுறோம்.அப்புடி இருக்கும்போது ,இதையெல்லாம் தமிழில் சொல்லிக்கிட்டு ஒரு இஞ்சினீரு வந்து நின்னா,போங்கசார்,நாங்க கொத்தனாரா வெச்சே கட்டிகிடுதோம்.அப்புடீன்னு தொரத்திடுவாங்க மக்கள்.
I met a doctor in Syria, who has studied in Arabic. He has finished is Medicine course, but unable to converse in english. He told me that he is ashamed to be like that. He wants to go out that country and learn English. Tamil is a must to learn for we Tamilians only as a language to converse, but not for any studies, except for a research in Tamil culture. Do any of our politicians put their kids in Tamil language course. I know Mr. Nangil Manogaran used to feel proud to stay in Delhi and mingle with Hindi speaking people. It is useless to study courses in Hindi also, except for learning that language. We need to study all the courses in English only, but learn the language of your interest. It can be language of neighboring states or any foreign country.
If u studied BE (Mech/ civil or any other dept) then you become BE-Tamil.
If u study the BE course in Tamil, then u will become BE-Tamil ( useless). This is real Engineer advice.
Political People knows, how to improve corruption..
Former knows how to improve his agriculture,..
Driver knows how to drive well,..
Actors knows how to act differently,..
Like that Engineers know improve his s,
for Engineers must know English to improve s,
+2 students dont believe the political & others F.Guys words, ie.
If u studied BE Mech / \Civil in Tamil Medium, then you become BE - Tamil. (not Mechanical or civil) All will know about BE - Tamil, how many job offer in the world.
சில நாட்களுக்கு முன்னர் தினமலரில் படித்த செய்திஎன்னவெனில் தமிழக இன்ஜினியரிங் மாணவர்கள் மற்ற மாநில மாணவர்களை காட்டிலும் திறமைகுரைவானவர்களே. ஆங்கிலத்தில் படிக்கும்போதே இந்தலக்ஷனம், தமிழில் படித்தால்..... தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடும் இவர்கள் வாரிசுகள் எல்லாம் என்ன மொழியில் படிக்கிறார்கள்? இவர்களின் அரசியல் நாடகத்தில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுரியாகபோகிறது.
பொறியியலை தமிழில் படிக்கவேண்டும் என்ற கருத்து சரியானது. ஆனால் அது நடைமுறையில் பயன் தறாது என்பது மிக க்கசப்பான உண்மை. தமிழில் போதிய நூல்கள் இல்லை என்பதும் பொறியியல் அறிஞர்களின் தமிழறிவு ஆற்றல் போதாது என்பதால் மாணவர்கள் ஆங்கிலத்தில் படிப்பது நலம். பொறியியல் மாணவர்களுக்கு நல்ல தமிழ் பயிற்சி வழங்கினால் எதிர்காலத்தில் தமிழில் பொறியியல் நூல்கள் பெருகி பொறியியலை தமிழில் கற்கும் நிலை ஏற்படும். மேலும் பொறியியலை அனைவருக்கும் கொடுக்க பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமாக ஆங்கிலம் போல இருக்கவேண்டும்.
இங்கேயும் அதே தான் பிரச்சினை, எப்பிடி தமிழ் வளர்ச்சி துறை என்று ஓன்று மந்திரி தலைமையில் பொறுப்பில்லாமல் செயல் படுகிறதோ அதே போல தான் தமிழில் பொறியியல் பாடங்களை ஆரம்பிப்பதும், கடைசியில் மூடு விழா செய்வதும், அதற்கு காரணம் மக்கள் ஆதரவு இல்லை என்பார்கள். நாமும் விவரம் இல்லாமல் தமிழ் சிறந்ததா, ஆங்கிலம் சிறந்ததா என்று நமக்குள் பட்டி மன்றம் செய்து கொண்டு கடைசியில் ஆங்கிலம் தான் சிறந்தது அது தான் உலக அளவில் பிராக்டிகலாக சிறந்தது என்று தீர்ப்பு சொல்லி தமிழுக்கு சமாதி கட்டுவோம். மற்ற நாடுகளை வளர்ந்து வரும் சிறிய நாடுகளை பாருங்கள், மன்னராட்சி முறை இருந்தாலும் அவர்கள் அவர்களது தாய் மொழியை வளர்ப்பதில் எவ்வளவு அக்கறை கொண்டு செயல்படுகிறார்கள் என்பது புரியும். அவர்கள் எண்ணிக்கையில் சிறிய அளவில் இருந்தாலும், ஒரு பொருளை சந்தைபடுத்துதலில் போதிய நுகர்வோர் பலம் இல்லா விட்டாலும், கணினி, மடிக்கணினி இல் இருந்து மொபைல் வரை அனைத்தும் அவர்கள் தாய் மொழியில் கி போர்டு இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்து அதை சாதிக்கிறார்கள். ஆங்கில அறிவு இல்லாதவர்கள் கூட அவர்கள் தாய் மொழியில் மொபைலில் SMS அனுப்புகிறார்கள். ஆனால் இங்கே நமது தமிழ்நாட்டில் மக்கள் தொகையின் அளவு, அதில் நுகர்வோர் பலம் என்று எடுத்து கொண்டால் நாம் நமக்கு தேவையானதை சந்தை படுத்துவோரிடம் இருந்து பெற முடியும், அவர்களை நிர்பந்த படுத்த வேண்டியது இல்லை. நாம் கேட்பதை செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள்......., இருக்க வேண்டும் அது தான் வியாபார அணுகுமுறை. ஆனால் செய்கிறோமா? இல்லை, ஏன் ?. இது ஒரு சாம்பிள். இப்பிடி ஒவ்வரு துறையாக கவனம் செலுத்தி தமிழ் மொழிக்குறிய வாய்ப்புகளை உருவாக்கும் போது, தமிழ் கற்பவர்களின் தேவை உயரும், தேவை உயரும் போது அந்த துறையில் கல்வி கற்க ஆர்வம் அதிகம் ஆகும். அதை அடுத்து கல்வி துறையும் அதற்க்கு ஏற்றார் போல் அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். காலம் மாறி வருகிறது, நாம் அண்ணாந்து பார்த்த காலம் மாறி, உலகம் நம்மை பார்க்க, நம்மை அணுக ஆரம்பித்துள்ளது. எந்த மக்கள் தொகை நமக்கு பாரமாக தெரிந்ததோ அதே மக்கள் தொகை, இன்றய தொழில் நுட்ப புரட்சியில் உலகத்தில் உள்ள அனைத்து சந்தைகளுக்கு சொர்க்க பூமியாக உள்ளது, அதை உணர்ந்து தக்க முறையில் புத்திசாலித்தனத்தோடு செயல் பட்டால் நாம் முன்னேறுவது மட்டுமில்லை நமது தமிழ் மொழியையும் உலகம் கற்றுக்கொள்ள வைக்க முடியும். பணம் சம்பாதிக்க திறமைசாலிகள் வெளிநாடுகளுக்கு சென்ற காலம் போய், இப்போது இந்தியாவின் முதலீட்டாளர்களை மற்ற சிறிய நாடுகள் எதிர் பார்க்க வேண்டிய நிலையில் முன்னேறி இருக்கிறது. ஆனால் நாம் நமது கலாசாரம், மொழி, நமது பண்பாடு பற்றி கவலை படாமல், பணம் ஒன்றை மட்டுமே குறியாக கொண்டு செயல்படும் அரசியல் வாதிகளின் தலைமையில் இந்தியா இயங்கி கொண்டு இருப்பதால் கண்ணை விற்று சித்திரம் வாங்கும் நிலை. இதை மாற்ற பொருளாதாரம் ஒரு தடையே இல்லை, நமது நல்ல சிந்தனை மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் வலியுறுத்துவது போல விழிப்புடன் கூடிய கனவு வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.