பெங்களூரு: ""காவிரி, கிருஷ்ணா நதிகளில் தடுப்பணைகள் கட்ட மத்திய அரசு, 2,600 கோடி ரூபாய் கொடுக்கவுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில், ஒரு லட்சத்து, 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறும்,'' என்று கர்நாடக சட்டசபையில் நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.
கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஜெயசந்திர பேசியதாவது:
கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லததால், கிராமத்தினர் நகருக்கு வருகின்றனர். அனைவரும் பெங்களூரு வருவதால், பெங்களூருவில் இட நெருக்கடி ஏற்படுகிறது.இதை சமாளிக்க பெங்களூருவில் நான்கு இடங்களில் லே-அவுட் அமைக்க, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. பி.டி.ஏ.,வின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. இதைச் சரிப்படுத்தினால், நம் மாநிலம் பெற்றுள்ள, ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை அடைத்து விடலாம். அதற்கு சட்டசபை குழு ஒன்றை அமைத்து கண்காணிக்க வேண்டும். விவசாயிகள் பயிர் செய்யும் விளை பொருட்களுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால், வரும் நாட்களில் விவசாயிகள் இல்லாத மாநிலமாக மாறிவிடும்.
காவிரியிலிருந்து, தமிழகத்துக்கு, 192 டி.எம்.சி., தண்ணீர் கொடுக்க வேண்டும் என, மத்திய தீர்ப்பாயம் கூறியுள்ளது. நாம் அதற்கும் மேல் தண்ணீர் கொடுத்து வருகிறோம். ஆனாலும், தமிழகம், நம் விவசாயத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அவர்களுக்கு, 192 டி.எம்.சி., தண்ணீருக்கு மேல் ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதி வருகிறார்.
இந்த விஷயத்தில் மாநில அரசு எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சியான நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம். காவிரி நம் தண்ணீர். இதில் எந்த ஒரு திட்டம் போடவும் நமக்கு உரிமையுள்ளது. தமிழகத்தில், மேட்டூர், ஒகேனக்கல் திட்டம் போல் நாம், "மேக்கேதாட்' பகுதியில் அணை கட்டுவோம். நீர் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி செய்யும்.தமிழகத்தில், காவிரி, வைகையில், 700 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தவுள்ளனர். நாம் நம் மாநிலத்திற்கு, மத்திய அரசிடம் கேட்கலாம் என்றார்.
இதற்கு பதிலளித்து நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் மொம்மை பேசியதாவது:
மத்திய அரசு, வாட்டர் மிஷன் திட்டத்திற்கு, 9,000 கோடி ரூபாய் முதல்கட்டமாக கொடுத்துள்ளது. இந்த வாட்டர் மிஷன் திட்டம் செயல்படுத்த, 2,600 கோடி ரூபாய் தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் மூலம் காவிரி உட்பட நம் மாநில நதிகளில் தடுப்பணைகள் கட்டி, அதன் மூலம் நம் மாநில விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியும். இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், நம் மாநிலத்தில், ஒரு லட்சத்து, 35 ஆயிரம் ஏக்கருக்கு சொந்தமான விவசாயிகள் பயன் பெறுவர் என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழக நதிகளை இணைக்க இந்த அரசு வரைவு திட்டத்தை மத்திய அரசிடம் சமர்பிக்க வேண்டும். அதற்கான ஒப்புதல் பெற்று, அதற்கான செலவுகளை, மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து செயல்படுத்த வேண்டும், இதற்கான திட்டத்தை இந்த அரசு விரைந்து முடித்தால் மட்டுமே அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பிறகாவது, தமிழக நீர்பாசன பிரச்சினைகள் ஓரளவுக்காவது குறைக்க முடிவும், இதில் அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம்.
வடநாட்டவற்கு தமிழன் என்றாலே இளக்காரம்தானே. அண்டை மாநிலங்களிலயே நமக்கு மதிப்பில்லையே. பிற மாநிலங்களில் மக்கள் பிரச்னை என்றால் கொள்கை பேதங்களை மறந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து போராடுகின்றனர். காரணம் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதனால் மத்திய அரசும் அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கிறது. நமக்குத்தான் ஈகோ அதிகமே. நாமெங்கே ஒன்றாகக்கூடுவது, இணைந்து போராடுவது? அம்மாவும், அய்யாவும் நாம் சிறுவயதில் படித்த "நான்கு எருதுகள்" கதையை மீண்டும் படிப்பது நல்லது. நாம் தமிழ் நண்டு கதையைத் தெரிந்துகொள்வது நல்லது. நண்பரே மரியா, அம்மா என்னதான் கேட்டாலும், அன்னை தரவிடமாட்டர்கள். " உங்களுக்கு இந்தியாவின் வாஜ்பாய் வேண்டுமா அல்லது வெளிநாட்டிலிருந்து வந்த அன்டோனியோ மெய்னோ வேண்டுமா" என்று அம்மா கேட்ட காயம் அன்னைக்கு இன்னும் ஆறவில்லை. அதுமட்டுமா? பொதுக்கூட்ட மேடைக்கு அன்னை வந்தபிறகும் அம்மா வராமல் காக்க வைத்தாரே அதுவும் அன்னைக்கு மறக்காது. அரசியல் என்பது ஓயாத போர் நிறைந்த பழிவாங்கும் உலகம். அங்கே பெருந்தன்மைக்கு இடமில்லை.
தமிழக அரசு கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளாவோடு கோர்ட், கேசு என்று மல்லுகட்டுவது ஒரு தனி தடத்தில் போகட்டும் அதே சமயம் தமிழகத்தின் நீர் ஆதாரத்தை எப்படி உயர்த்துவது என்பதை யோசிக்கும் காலம் இது. இதனை அரசு மைக்ரோ லெவெலில் டீ-சென்ட்ரலைஸ் செய்து கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள் கைகளில் ஒப்படைத்து நீர் வள அமைச்சகம் என்ற ஒரு தனி அமைச்சகத்தையும் உருவாக்கி அதன்மூலம் கண் காணிக்க வேண்டும். இந்த அமைச்சகம் மூலம் இதுவரை திருடப்பட்ட நீர்வளங்கள் எல்லாவற்றையும் மீட்டு, அதில் நீரை சேமித்து வைக்கும் திறனை உயர்த்த வேண்டும். தற்போது தென் இந்திய நதிகளில் இருந்து பத்து விழுக்காடு தண்ணீர்தான் கலக்கிறது. அதனை ஜீரோ லெவெலுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆந்திர அரசு ராயலசீமா ஏரியாவில் தடுப்பணைகள் மூலம் கடந்த பத்து ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகளுக்கு தற்போது தகுந்த பலன் கிடைத்துள்ளது என்று தினமலர் வெளியிட்டுள்ளது. அதனை பின்பற்றி நாம் இன்று தொடங்கினால், கூடிய விரைவில் பலன் கிடைக்கும். "BETTER LATE, THAN NEVER" - என்பது ஆங்கில பழமொழி.
திரு பன்னாடை, மிக சிறந்த கருத்து. நீங்கள் அரசில் சார்பானவராக இருப்பினும், உங்களிடம் எனக்கு பிடித்ததே இது போன்ற தொலைநோக்கு பார்வைதான். நீங்கள் சொல்லிருக்கும் இந்த அரசியல் கலக்காத இந்த கருத்தை நிச்சயம் நடைமுறை படுத்த நீண்ட தொலை நோக்கு திட்டம் போடுதல் அவசியம். திரு கலாம் வலியுறுத்தி வருவது போல், தென்னக நதிகள் இணைக்கப்படவேண்டும், இதன் மூலம் தமிழக தண்ணீர் தேவையின், பற்றாகுறை பெறும்பகுதி குறைக்கப்படும். மிக முக்கியமாக நீர்வளங்கள் மீட்கப்படவேண்டும், எனக்கு தெரிந்து எங்கள் ஊரிலிலேயே மிக பெரும்பாலான கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் அடைபட்டுவிட்டன அல்லது மிக குறுகிவிட்டன, இதனை மீட்டெடுத்து ஒழுங்கு படுத்துதல் காலத்தின் அவசியம். இதில் அரசியல் குறுக்கீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், நன்றி திரு பன்னாடை. ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.