கடலூர்:கடலூரில், "தானே' புயலால் பாதித்த மக்களுக்கு, அரசின் நிவாரண நிதி வழங்கியதில், "மெகா' மோசடி நடந்திருப்பது, தகவல் அறியும் சட்டத்தின் மூலம், அம்பலமாகியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர், 30ம் தேதி வீசிய, "தானே' புயலில், கடலூர் மாவட்டமே, பெரும் சேதத்திற்குள்ளானது. பல்லாயிரக்கணக்கானோர், வீடுகளையும், உடமைகளையும் இழந்து, பெரும் பாதிப்பிற்குள்ளாகினர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முழுமையாக சேதம் அடைந்த வீட்டிற்கு, 5,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த வீட்டிற்கு, 2,500 ரூபாயும் வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.புயலால், ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளை இழந்தவர்களுக்கு மட்டும், நிவாரணம் கொடுத்தால் பிரச்னையாகும் என ஆளும் கட்சியினர் கூறியதைத் தொடர்ந்து, ரேஷன் கார்டு அடிப்படையில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. அப்போதே பலருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதனைக் கண்டித்து பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடந்தன.ஆனால் அதிகாரிகள், நிவாரண உதவித் தொகை நேர்மையாக வழங்கப்பட்டுள்ளது எனக் கூறினர். மக்கள் போராடி ஓய்ந்தனர்.
இந்நிலையில், கடலூர் நகராட்சிக்குட்பட்ட மம்சாப்பேட்டையைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவர், தான் சார்ந்த 44வது வார்டில், எத்தனை பேருக்கு புயல் நிவாரணம் வழங்கப்பட்டது, எவ்வளவுத் தொகை வழங்கப்பட்டது என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் கேட்டு, நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தார்.அதற்கு, நகராட்சி அலுவலகத்தைச் சேர்ந்த தகவல் அதிகாரி கொடுத்துள்ள பதிலில், கடலூர் நகராட்சி, 44வது வார்டில், ஒவ்வொரு கார்டுக்கும் தலா, 2,500 ரூபாய் என, 1,418 ரேஷன் கார்டுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. மொத்தம், 28 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கியதாக குறிப்பிட்டிருந்தார். அதனுடன் இணைத்து வழங்கிய பயனாளிகளின் பட்டியலில், 1,220 பேருக்கு நிவாரணம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கொடுத்த தகவலின்படி, தலா, 2,500 ரூபாய் என, 1,418 ரேஷன் கார்டுக்கு, மொத்தம், 35 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்க வேண்டும் அல்லது பயனாளிகள் பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, 1,220 பேருக்கு, 30 லட்சத்து 50 ஆயிரம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், நிவாரணம் வழங்கியதோ, 28 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே. அதிலும், பயனாளிகள் பட்டியலில் ஒரே கார்டிற்கு இருமுறை நிவாரணம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், "தானே' புயல் நிவாரணத்தில், பெரிய அளவில், "மெகா' மோசடி நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடலூர் வந்து பாருங்கள். மந்திரியின் தொகுதி போலவா உள்ளது? அவனவன் சுனாமியில் இருந்து தானே வரைக்கும் சுருட்டிக்கொண்டுதான் இருக்கிறான். தேவனாம்பட்டினம் செல்லும் வழியில் சுனாமி யில் சிதைந்து விட்ட ஒரு பாலத்தை ராஜஸ்தான் மாநில எம் பிக்கள் புதியதாக கட்டி கொடுத்தார்கள். அதை நம் தமிழக அரசு கட்டியதாக அங்குள்ள கல்வெட்டு சொல்கிறது. எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டதோ தெரியவில்லை. அங்குள்ள பெரியார் கலை கல்லூரிக்கும் எஸ்.பி இல்லத்திற்கும் கூட சுனாமியில் விழுந்த காம்பௌன்ட் சுவரை (சுமார் 1500 அடி நீளமும் 6 உயரமும் ) ராஜஸ்தான் மாநில எம் பிக்கள் தம் தொகுதி நிதியில் இருந்து கட்டிக்கொடுத்தார்கள் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
உண்மை என்னென்றால் அரசியல்வாதிகளை விட அரசு பணியில் இருக்கும் ஊழியர்களே அதிகம் ஊழல் செய்கிறார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட காட்சி. ஏழை பெண்களின் திருமண உதவித்தொகையாக ரூபாய் 20000 அரசு அளித்த காசோலையை மாற்ற வேண்டி எனது உறவினர் விழுப்புரம் தாலுக்காவில் உள்ள வாக்குர் கிராமத்தில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்றபோது அங்குள்ள பெண் ஊழியர் ஒருவர் 200 ரூபாய் கொடுத்தால்தான் காசோலையை மாற்ற முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார், அரசு ஒழியார்கள் அவரவர் அதிகாரத்திற்கு தகுந்தாற்போல் ஒழல் செய்ய நினைக்கிறார்கள். இதே போன்று செஞ்சி தாலுக்காவில் உள்ள வட்டாச்சியர் ஆவலகதிலும் நான் கண்டேன் பிறப்பு சான்றிதழ் எழுதுபவருக்கு 50 ருபாய் முத்திரை பதிக்கும் பெண் ஊழியருக்கு 10 ருபாய் இவர்கள் இந்த லஞ்ச பணத்தை கேட்க்கும் முறை டீ செலவுக்கு. கையில் தேன் படாதவரை என் கையும் சுத்தம் என்கைளும் தேன் பட்டுவிட்டால் நானும் நக்கத்தான் செய்வேன் என்ற அளவுக்கு உள்ளது இன்றைய ஊழல் இந்தியாவின் வேகம்.
அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள் - NGO க்கள். போனதடவை இந்த NGO க்களை ஜெயலலிதா நன்றாக அடக்கி வைத்திருந்தார். அப்போது தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால், இப்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயபடுகிறார். NGO க்கள் மனது வைத்தால், தேர்தலை மாற்றி விடுவார்கள். (ப சிதம்பரம் தேர்தல் போல்). அவர்களை எப்படியாவது அடக்க வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.