விக்கிரவாண்டி:விழுப்புரம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார், முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், வெளிநாடு சென்று திரும்பிய மூன்று பேரும், பைக்கில் வந்த ஒருவரும் பரிதாபமாக இறந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 55. இவர், சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார். இவருடன் திருச்சி அம்பிகாபுரத்தைச் சேர்ந்த காஜா ஷெரீப், 32, என்பவரும் பணியாற்றி வந்தார். இருவரும், நேற்று முன்தினம், சவுதி அரேபியாவிலிருந்து விமானம் மூலம், தமிழகம் திரும்பினர். அதே விமானத்தில், சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த, திருச்சியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், 33, தஞ்சாவூரைச் சேர்ந்த ருத்திராபதி, 45, ஆகியோரும் வந்துள்ளனர்.நேற்று காலை, 10 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்த இவர்களை வரவேற்க, ஆறுமுகத்தின் மனைவி முத்துலட்சுமி, 50, மகன்கள் சரவணகுமார், 20, கார்த்திக், 22 மற்றும் கார் ஓட்டுனர் ரியாஸ்அகமது, 30, ஆகியோர், காரில் வந்திருந்தனர். நேற்று காலை, 10.30 மணிக்கு, சென்னை விமான நிலையத்திலிருந்து, இவர்கள் அனைவரும் குவாலிஸ் காரில் திருச்சி நோக்கி புறப்பட்டனர்.பகல், 12.30 மணியளவில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள, வி.சாலை அரசு பள்ளி அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது, கார் திடீரென மோதியது.
மோட்டார் சைக்கிள், காரின் அடியில் சிக்கி, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, முன்னால் சென்ற லாரி மீது மோதியதில், காரும், மோட்டார் சைக்கிளும் நசுங்கின. காரில் வந்த ஆறுமுகம்,55, ஜெயச்சந்திரன்,33, ருத்திராபதி,45, மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த, உளுந்தூர்பேட்டையை அடுத்த, புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தே.மு.தி.க., நிர்வாகி சுப்ரமணியன்,35, ஆகியோரும் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே இறந்தனர். விபத்தில் காரில் பயணம் செய்த முத்துலட்சுமி, சரவணகுமார், கார்த்திக், காஜாஷெரீப், கார் ஓட்டுனர்
ரியாஸ்அகமது ஆகிய ஐந்து பேரும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி பலத்த காயமடைந்தனர்.தகவலறிந்த விழுப்புரம் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, பொது மக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த கோர விபத்து, அப்பகுதி மக்களை, அச்சத்தில் ஆழ்த்தியது. விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்தால் நிறைய குடும்பங்கள் அனதயாக்கபடுகின்றன. மாண்புமிகு CM, speed detector அமைத்து செக் பண்ண லாமே. . அரசு செலவீனகளுக்கு பயந்தால் தனியாருக்கு டெண்டர் விடலாம் .உண்மையிலேய இலவச லேப்டாப் கொடுத்தாங்க இது அதைவிட இன்னும் செலவு ரொம்ப கம்மியாதான்.. கண்டிப்பா cm செய்வாங்க.. இத மாதிரி விசயங்கள.. அவங்கள்ட்ட கொண்டு போகணும்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.