Advertisement
கனிமொழி இடம்பெற்றுள்ள பார்லி.,‌யை மதிக்க மாட்டேன்: கெஜ்ரிவால்;ஹசாரே கருத்துக்கும் எதிர்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2012,22:52 IST
மாற்றம் செய்த நாள் : ஜூலை 29,2012,09:32 IST

புதுடில்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தாக்கி பேசக்கூடாது என்ற ஹசாரே, ராம்தேவின் கருத்துக்களை ஏற்க அன்னா குழுவின் அர்விந்த் கெஜ்ரிவால் ஏற்க மறுத்து விட்டார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள 15 மத்திய அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். எம்.பி.,க்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்களை அமைக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை, சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்னா ஹசாரே குழுவைச்சேர்ந்த,அர்விந்த் கெஜ்ரிவால், மணீஸ் சிசோடியா, கோபால் ராய் ஆகிய மூன்று பேரும் டில்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 25ம் தேதி துவக்கினர்.


மூன்றாவது நாளக நேற்று நடந்த போராட்டத்தின் போது, தனது ஆதரவாளர்களுடன் வந்த யோகா குரு பாபா ராம்தேவ், அன்னா ஹசாரேயின் இயக்கத்திற்கு எனது ஆதரவு எப்போதும் உள்ளது. அதே நேரத்தில் எவரையும் தாக்கிப்பேசக்கூடாது. ஜனாதிபதி பதவி என்பதுஅரசியல் சட்ட பதவி. அந்த அரசியல் சட்ட பதவி வகிப்பவரை யாரும் விமர்சிக்கக் கூடாது. இதனை அன்னா ஹசாரேவும் ஏற்றுக் கொண்டுள்ளார் எனக்கூறினார்.


இந்நிலையில் இன்று பேட்டியளித்த அன்னா ஹசாரேவும், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார்.


இந்நிலையில் இவர்களது கருத்துக்களைஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் கெஜ்ரிவால்.


ஜந்தர் மந்தர் பகுதியில் மக்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், ஒரு சிலர், பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியான பின்பு அவர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்துபேசக்கூடாது என கூறுகின்றனர். இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறினார். கெஜ்ரிவால் இவ்வாறு கூறிய போது ஹசாரே மேடையில் இருந்தார். கெஜ்ரிவால் மேலும் கூறியதாவது: ஜனாதிபதி பதவியில் ராஜேந்திர பிரசாத், அப்துல் கலாம் ஆகியோர் அமர்ந்து அழகு பார்த்தனர். ஆனால் தற்போது ஜனாதிபதி பதவி தனது மதிப்பை இழந்துவிட்டது. அம்பேத்கார், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் இடம்பெற்ற பார்லிமென்டை மதிக்கிறேன். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள லாலு பிரசாத், முலாயம் சிங், கனிமொழி இடம்பெற்றுள்ள பார்லிமென்டை மதிக்க மாட்டேன் என கூறினார்.


மேலும் அவர், ஜனாதிபதி மறறும் பார்லிமென்ட் ஆகியவை கடவுளை விட உயர்ந்தது அல்ல. தேச நலனுக்காக எங்களை துரோகி என கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயார் என கூறினார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (22)
felix - madurai  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூலை-201217:17:20 IST Report Abuse
felix பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் ஊழல்வாதி் அல்ல ஓரு சிலருக்காக அனைவரையும் மதி்க்காமல் இருக்க கூடாது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
RANGARAJAN YAMUNACHARI - calcutta,இந்தியா
30-ஜூலை-201204:39:52 IST Report Abuse
RANGARAJAN YAMUNACHARIகனையைச் சொல்லிக் குற்றமில்லை. அவங்களத் தேர்ந்தெடுத்தாங்களே அவங்களச் சொல்லணும்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
thesaapimaani - chennai ,இந்தியா
29-ஜூலை-201216:01:25 IST Report Abuse
thesaapimaani சுதந்திர இந்தியாவில், ஜனநாயக நாட்டில் கருத்து உரிமை உள்ளது என்பது உண்மை என்றால், யார் வேண்டுமானாலும் யார் மேலேயும் குற்றசாட்டுக்கள் சொல்லலாம் அதற்கு போதிய ஆதாரங்கள் தான் வேண்டுமே ஒழிய யார் என்ன பதவியில் இருக்கிறார்கள் என்று பார்த்து அதற்கேற்றார் போல் பேச வேண்டும் என்று யாரையும் நிர்பந்திக்க முடியாது. ஜனாதிபதி என்பவர் அவரும் மனிதர் தான், அவர் மீது குற்றம் இருப்பின் அதை தீர விசாரிக்க வேண்டியது அரசின் கடமை அதை விடுத்து அடக்கு முறை தர்பார் செய்தால் என்ன ஆகும் என்று வரலாறுகளை புரட்டி பார்த்தால் தெரியும். அப்பிடி புரட்டி பார்க்க சோம்பேறித்தனமாக இருந்தால் வரும் காலம் அவர்களுக்கு உணர்த்தும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Johny Goldan - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூலை-201214:03:38 IST Report Abuse
Johny Goldan Whoz gonna stop these corrupt politicians? ?? if Anna & Kejiriwal can do it hatsoff to them.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
நீலகண்டன் - Chennai  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூலை-201213:35:33 IST Report Abuse
நீலகண்டன் இப்படி ஓரு தேசிய தலைவர் நமக்கு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Deen - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூலை-201212:53:49 IST Report Abuse
Deen ஊழலுக்கு எதிரான அமைப்பினர் M L A , M P அளவிற்கு செல்ல முடியாவிட்டாலும் , தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் அளவில மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி திறமை , நேர்மை உள்ளவர்களிடம் ஆளும் அதிகாரம் கிடைபதட்கு முயற்சி செய்ய வேண்டும் ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Muthu kumar - Kuwait  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூலை-201210:27:26 IST Report Abuse
Muthu kumar எலிக்கு பயந்து வீட்னட கோளுத்தாதீர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
29-ஜூலை-201209:50:27 IST Report Abuse
villupuram jeevithan இந்த எட்டு ஆண்டுகளில் இந்த பார்லியமென்ட்வாதிகள் அடித்த கொள்ளை தான் நாட்டை இந்த நிலைக்கு இந்தியாவை தள்ளிவிட்டது. இவர்கள் இல்லாமல் இருந்தாலே நாடு முன்னேறி இருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
29-ஜூலை-201206:10:25 IST Report Abuse
A R Parthasarathy இன்றைய அரசியல் வாதிகளில் புத்தனையோ, காந்தியையோ காணமுடியாது. எல்லாருமே ஏதேனும் ஒருவிதத்தில் குற்றம் புரிந்தவர்களாக தான் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் அண்ணா கூறியதாக மக்கள் பேசிகொண்டது உண்டு "பானுமதி படி தாண்டா பத்தினியும் அல்ல நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல" என்று. அரசியல் சாக்கடையில் நெளியும் புழுக்களில் தகுதியை எங்கே என்று தேடுவது? ஜனாதிபதி ஒரு அரசியல் வாதியாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவர் விமரிசனத்திற்கு உரியவரே வேட்புமனு செய்யும்போதே பிரச்னை, அதை நிராகரிக்க வேண்டுகோள் வைத்தும் தேர்தல் அதிகரி மறுத்தார் தேர்தல் ஆணையம் கூட நீதி மன்றத்திற்கு போகச்சொல்லி விட்டது. இப்போது ஜனாதிபதி ஆகிவிட்டார். அவரை எதிர்த்து நீதி மன்றம் போகலாமா, கூடாதா? முதலிலேயே அவரை தடுத்து நிறுத்த வேண்டிய சட்ட விதிகளை எல்லாம் உடைத்து விட்டு அவரை ஜனாதிபதி ஆக்கிய பிறகு, நீதி மன்றம் போ என்றால், நீதி மன்றம்கூட அரசியல் சட்டபாதவி வகிப்பவருக்கு எதிராக தீர்ப்பு கூற மறுத்துவிட்டால் என்ன செய்வது? "சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும்" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுபோல நாட்டின் முதல் குடிமகனாக வருபவர் இருக்கவேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லையே?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
MOHAMED SHAHUL - Chennai,இந்தியா
29-ஜூலை-201212:02:10 IST Report Abuse
MOHAMED SHAHULwell டன் A R Parthasarathy...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
29-ஜூலை-201205:53:58 IST Report Abuse
A R Parthasarathy கேஜ்ரிவாளின் உணர்ச்சிவசமான பேச்சிற்கு பாபா ராம்தேவ் கடிவாளம் இட்டிருக்கிறார். ஜனாதிபதி பதவி என்பது அரசியல் சட்டப் பதவி. அதை விமரிசிக்ககூடது. மெத்த சரி. ஆனால் அதே நேரத்தில் அதற்குண்டான தகுதியையும் ஆராயவேண்டும். அவர் அந்த பதவிக்கு வந்த வழியை பாருங்கள். அவர் அமைச்சராக இருக்கும்போது அவர்மீது இந்த குழுவினர் குற்றம் சாட்டினர் ஊழல் வாதி என்று. அதுகூட போகட்டும். நாட்டு மக்களே பார்த்துகொண்டிருந்தனர் அவர் கையெழுத்தில் தில்லு முள்ளு நடந்ததை. அவர் மாநிலம் மாநிலமாக சென்று வாக்குகளை சேகரிக்கும்போது, அவருக்கு எதிரான வாக்குகள் விழக்கூடிய மாநிலமான பீகார், உ.பி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு அதிகபடியான நிதியுதவிகளை செய்தார். வெற்றி பெற்ற பின்பும், கர்நாடகா ஓட்டுகளை மற்றிபோட்டதை அறிந்து அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு நடந்திருக்கிறது. இப்படி எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தவறுகளை செய்துவிட்டு அவரை பற்றி பேசக்கூடாது என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று யாரேனும் விளக்குவார்களா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
29-ஜூலை-201205:40:02 IST Report Abuse
A R Parthasarathy போராட்டம் என்று ஆரம்பிக்கும் முன் இதை பற்றி எல்லாம் சிந்தித்திருக்கவேண்டும். ஆரம்பித்த பிறகு அது கூடாது, இது கூடாது என்று சொல்லமுடியாது. ஒட்டுமொத்த ஊழல் வாதிகளை ஒழிப்பது என்பது இந்தியாவில் யாராலும் முடியாது அந்த அளவிற்கு அது வேருன்றி விட்டது. போராட்டக்காரர்கள் ஊழல்வாதிகளை நாட்டுமக்களுக்கு அடையலாம் காட்டுவதோடு அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்காமல் இருபதற்கு தடைவிதிக்க நீதி மன்றத்தை வற்புறுத்த வேண்டும். மக்கள் மன்றத்தின் முன் ஊழல்வாதிகளை ஒதுக்கி தள்ளும்படி வேண்டுகோள் விடவேண்டும். அதற்காக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என்பதோ, இந்தியாவில் இருக்கமாட்டேன் என்பதோ தீர்வாகாது. சரியான வழி நடத்துதல் இருந்தால் மட்டுமே மக்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரமுடியும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.