மதுரை:மதுரையில் விவசாயிக்கு வீட்டை விற்றும், மூலப்பத்திரத்தை கொடுக்காமல் மோசடி செய்ததாக மாநகராட்சி 19வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் முருகேசன் உட்பட இருவர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை கோவில்பாப்பாகுடியை சேர்ந்த விவசாயி மணி. பரமக்குடி பாரதிநகரை சேர்ந்தவர் ரவீந்திரன், 55. இவருக்குச் சொந்தமான வீடு, மதுரை சிக்கந்தர் சாவடி விக்னேஷ் நகரில் இருந்தது. இவரது பவர் ஏஜன்ட் மதுரை சொக்கலிங்க நகர் முருகேசன், 58, (தற்போது மாநகராட்சி 19வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்.)முருகேசனிடமிருந்து தனது பெயரிலும், மனைவி பெயரிலும், மணி, 2008ல், 6.50 லட்ச ரூபாய்க்கு வீட்டை வாங்கினார். ஆனால், கிரையம் வாங்கும் முன்பே பொது அதிகார பத்திரம், மூல ஆவணங்களின் நகல்கள், வில்லங்கச் சான்றுகளை மணியிடம் முருகேசன் கொடுத்தார். மூலப் பத்திரத்தை, ரவீந்திரனிடமிருந்து பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். ஆனால் மூலப்பத்திரத்தை, மணிக்கு தராமல் முருகேசன் தாமதப்படுத்தினர். மூலப்பத்திரத்தை, மதுரை ஆர்.எம்.எஸ்., ரோடு ஸ்டேட் வங்கி கிளையில் ரவீந்திரன் ஏற்கனவே ஐந்து லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்தது தெரிய வந்தது. ரவீந்திரன், முருகேசன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, எஸ்.பி.,யிடம் மணி புகார் செய்தார். நடவடிக்கை இல்லாததால், மதுரை நான்காவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தார்.பொய் ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக, கோர்ட் உத்தரவின்படி ரவீந்திரன், முருகேசன் மீது கூடல்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்து முருகேசனிடம் கருத்துக் கேட்க, அவரது அலைபேசியை தொடர்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.