புதுடில்லி: ""காங்கிரஸ் கட்சியிலும், மத்திய அரசிலும், எந்த பதவியை கொடுத்தாலும், ராகுல், அதை திறமையாகச் செய்வார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
மலையாள "டிவி' சேனலுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அளித்த பேட்டி: லோக்சபா, மத்திய அரசு, காங்கிரஸ் கட்சி என, இந்த மூன்றில், எந்த பதவியை கொடுத்தாலும், ராகுல், அதை திறமையாக செய்வார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும், ராகுலுக்கு எந்த பதவி கொடுப்பது என்பது குறித்து காங்., தலைவர் சோனியா, பிரதமருடன் ஆலோசனை நடத்துவார். அதேநேரத்தில், ராகுலுக்கு என்ன பதவி கொடுத்தாலும், அதை நான் வரவேற்கிறேன். இவ்வாறு சிதம்பரம் கூறினார். கட்சியிலோ, ஆட்சியிலோ, மிகப்பெரிய பொறுப்பு ராகுலுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ராகுலுக்கு ஒண்ணும் தெரியாது, அவரால தன்னுடைய, கட்சியையே உத்தர பிரதேசத்திலே கரை சேக்க முடியலேன்னு சொல்ல முடியாது சிதம்பரத்தாலே அதனால இப்படி சொல்லியிருக்கார் போல இருக்கு. என்ன பண்றது, இன்னும் கொஞ்ச நாளைக்கு பதவியிலே இருக்கணும், கார்த்திக் சிதம்பரத்துக்கு நல்ல பதவி வாங்கணும், எவ்வளோ வேலை இருக்கு, இப்போ போய் உண்மையை சொல்ல முடியுமா என்ன?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.