நகரி: திருப்பதி, திருமலையில் டீக்கடைக்காரரை தாக்கியது தொடர்பாக, தமிழகத்தை சேர்ந்த நால்வரை, போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர். திருமலையில் வைகுண்டம்-1 கியூ எதிரே உள்ள டீக்கடைக்காரரிடம், சிலர் தகராறு செய்து, அவரை தாக்கியதாக கிடைத்த புகாரையடுத்து, திருமலை போலீசார் நால்வர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், திருச்சியை சேர்ந்த மணிகண்டன், வெங்கடேசன், அய்யப்பன், மாரியப்பன் மற்றும் மேலும், இருவரும் கடந்த செவ்வாய் அன்று சாமி தரிசனத்திற்காக திருமலைக்கு வந்துள்ளனர். இவர்கள் ஆறுபேரும் டீக்கடைக்காரரிடம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த இவர்கள், டீக்கடைக்காரரை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தியது தெரியவந்தது. திருமலை போலீசார் வழக்கு பதிந்து, நால்வரையும் கைது செய்தனர். மேலும் இருவரையும் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.