ஐதராபாத்: ஆந்திர மாநில எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்களின் சொத்து விவரங்களை, அடுத்த 15 நாட்களுக்குள், சட்டசபை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சொத்து விவரங்கள், விரைவில் சட்டசபை இணையதளத்தில் வெளியிடப்படும்.
இதுதொடர்பாக, ஆந்திர சட்டசபை சபாநாயகர் நாதெந்துலா மனோகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில எம்.எல்.ஏ.,க்களின் சொத்துகள் மற்றும் கடன் விவரங்கள், விரைவில் சட்டசபை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. அதனால், அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், 15 நாட்களுக்குள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். ஆந்திர சட்டசபை அலுவல் விதி 364ன் கீழ், எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 31ம் தேதிக்குள் தங்களின் சொத்து விவரங்களை, சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். உறுப்பினர்கள் இந்த விவரங்களை, ஏற்கனவே தேர்தல் நேரத்தில் சமர்ப்பித்திருந்தாலும், புதிதாக சொத்துகள் மற்றும் கடன்கள் வாங்கியிருந்தால், அவற்றையும் சேர்த்து, இப்போது சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக சொத்துகள் மற்றும் கடன் வாங்கியிருக்கா விட்டால், பழைய விவரங்களே போதுமானது. இவ்வாறு சபாநாயகர் மனோகர் கூறினார். ஆந்திர மாநில எம்.எல்.ஏ.,க்கள் இதுவரை, தங்களின் சொத்து விவரங்களை, சீலிட்ட கவரில் வைத்து சபாநாயகரிடம் சமர்ப்பித்தாலும், அது பகிரங்கமாக வெளியிடப்படாது. ஆனால், இம்முறை அவற்றை, சட்டசபை இணையதளத்தில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசிய சட்டத்திலேயே மிகபெரும் குளறுபடிகள்.தயாநிதிக்கு வெறும் 10 கள் கோடிகல்தான் இருக்கிறது என்கிறது பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ தகவல் மையம் அனால் அவர்களின் கீழ் பணிபுரியும் சிபிஐ யோ அவர்களுக்கு தெரிந்து 500 கோடிக்குமேல் இருக்கிறது என்கிறார்கள். மக்களை இவர்கள் எத்தனை நாட்கள்தான் மூடர்களாக வைத்திருப்பார்கள்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.