சென்னை தி.நகர் ஸ்ரீ கிருஷ்ண கான சபா கலையரங்கத்தில் அண்மையில் "யக்ஞராமன் லைப் டைம் அச்சீவ்மென்ட்' விருதை, லய மேதை பத்மபூஷண் டாக்டர் உமையாள்புரம் கே.சிவராமனுக்கும், "யக்ஞராமன் அவார்ட் ஆப் எக்சலன்ஸ்' விருதை, சிறந்த வயலின் கலைஞர் பத்மா சங்கருக்கும், நாட்டியக் கலைஞர் ஜானகி ரங்கராஜனுக்கும், பிரபல சங்கீத வித்வான் ஆர்.கே.ஸ்ரீகண்டன் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியை இனிதே துவக்கியவர் கேரளத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி. இந்த விருதுகளைப் பெற்ற கலைஞர்களை பாராட்டி சங்கீத நாடக அகடமி தலைவி நிருத்ய சூடாமணி லீலா சாம்சன், மத்திய அரசின் விஞ்ஞான தொழில் நுட்பத் துறை செயலர் டாக்டர் டி.ராமசாமி - சங்கீத சூடாமணி அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் (தவில் கலைஞர்), சங்கீத சூடாமணி ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் (மிருதங்க கலைஞர்) பேசினர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து மகாராஷ்டிர அபங்க் ரத்னா கணேஷ் குமார் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.
- மாளவிகா.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.