அறிவியல் ஆயிரம்
விண்கற்களின் விளைவுகள்
விண்கற்கள்,
பூமியில் மோதிய இடங்களில் விரும்பத்தகாத விளைவுகள் உடனடியாகவும்,
காலங்கடந்தும், மறைமுகமாகவும், நேரடியாகவும் தொடர்ந்தும் ஏற்பட்டுக் கொண்டே
இருக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. பெரு நகரத்தில், காரன்காஸ் என்ற
கிராமத்தில் விண்வெளி கல் ஒன்று மோதியது. இதனால் அந்த இடத்தில் இருந்த
நீர்நிலைகள், நிலத்தடி நீர் ஆர்செனிக் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டது.
பயன்படுத்த முடியாத அளவுக்கு ஆர்செனிக்கின் நச்சுத்தன்மை உள்ளது.
விண்வெளிக்கற்கள் மோதினால் தான், ஆர்செனிக் உருவாகும் என்பது இல்லை.
வங்கதேசம், மேற்குவங்கம் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர், ஆர்செனிக்
மாசினால் பாதிக்கப்பட்டு உள்ளது. கங்கை ஆறு ஓடும் பகுதிகளில் ஆயிரத்து 312
கிராமங்கள், ஆர்செனிக் மாசுவினால் பாதிக்கப் பட்டுள்ளன. இப்பகுதிகளில்,
எந்த நூற்றாண்டி லாவது விண்வெளிக்கற்கள் மோதியதா என்று ஆய்வு நடத்த
வேண்டும்.
தகவல் சுரங்கம்
நிலவே... நெருங்காதே...
சூரியக்
கதிர்கள், கடுமையான வெயிலில் உக்கிரமாக இருப்பதால் நம் தோலைப்
பாதிக்கும். இதனைத் தடுக்க, வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும். குடை
பயன்படுத்த வேண்டும், சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்த வேண்டும்
என்றெல்லாம் கூறுகிறோம். நிலவொளி, குளிர்ச்சியானது என்கிறோம். ஆனால்
நிலவொளியில் இரவு முழுவதும் படுப்பது உடல் நலனைப் பாதிக்கும் என ஆயுர்வேதம்
கூறுகிறது. நிலவொளிக் கதிர்களுக்கு நம் உடல் நலனை மட்டுமின்றி, மனநலனையும்
பாதிக்கும் திறன் உள்ளதாம். வெஸ்ட் இண்டீசில் உள்ள கிரவுடாவின்
பழங்குடியினர், நாம் கடுமையான சூரிய வெயிலுக்கு பயப்படுவதைப் போல, அவர்கள்
நிலவொளிக்குப் பயப்படுகின்றனர்.நிலவொளி தங்கள் உடம்பின் மீது விழ, அவர்கள்
அனுமதிப்பதில்லை. இரவு நேரங்களில் நிலவின் ஒளி படாமல், குடை பிடித்துக்
கொண்டு தான் நடமாடுகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.