"வாங்கி வந்த வரம் அப்படி...!'
பா.ஜ., மூத்த தலைவரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடியை தாக்கி பேசுவதால், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான, நிதிஷ் குமார் மீது, பா.ஜ.,வினர், கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த விவகாரத்தில், நிதிஷ் குமாருக்கும், பா.ஜ.,வினருக்கும் இடையே, வார்த்தை போர் வெடித்து வருகிறது. சமீபத்தில், இந்த விவகாரம், பொதுமக்கள் முன்னிலையில், வெளிப்படையாக வெடித்தது. தர்பங்கா மாவட்டத்தில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது குறித்து, அங்குள்ள அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார், முதல்வர் நிதிஷ் குமார். இதில், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் பங்கேற்றனர். அந்த தொகுதியின் எம்.பி., என்ற முறையில், மாஜி கிரிக்கெட் வீரரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, கீர்த்தி ஆசாத்தும், கூட்டத்தில் பங்கேற்றார். ஆலோசனையின் போது, நிதிஷ் குமார், தன்னை அலட்சியப்படுத்துவதை பார்த்து, கொதித்தெழுந்தார், கீர்த்தி ஆசாத். "எனக்கும், பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்' என, ஆவேசமாகக் கூறினார். அவரை, ஏற இறங்க பார்த்த, நிதிஷ் குமார், "முக்கியமான ஆலோசனை கூட்டத்தில், இப்படியெல்லாம், சத்தம் போடக் கூடாது. வாயை அடக்குங்கள்' என்றார். வேறு வழியில்லாததால், கீர்த்தி ஆசாத்தால், எதுவும் பேச முடியவில்லை. அங்கிருந்து வெளியேறிய அவர், பத்திரிகையாளர்களிடம், "முதல்வருக்கு, பொது இடத்தில் எப்படி பேசுவது என்றே தெரியவில்லை; நாகரிகமாக பேசுவது எப்படி என, அவரை தெரிந்து கொள்ள சொல்லுங்கள்' என்றார். பீகார் பொதுமக்களோ, "குழாயடி சண்டையை விட, இவர்களின் குடுமிப் பிடி சண்டை, ரொம்ப மோசமாக இருக்கிறதே... நாம் வாங்கி வந்த வரம் அப்படி இருக்கிறது' என, தலையில் அடித்துக் கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.